All Ceylon Jamiyyatul Ulama

Incorporated by Parliament Act No. 51 of 2000

Flood Relief Project “Back To Business”

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக ‘Back to Business’ என்ற உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக சிறு தொழில் செய்வோருக்கும் பழுதடைந்த ஆட்டோ ஓட்டுனர்களின் ஆட்டோக்களை திருத்திக் கொள்வதற்குமாக சுமார் 143 நபர்களுக்கு இத் திட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் ரூபா 3,851,820 பணம் ஒதுக்கப்பட்டு  Muslim Aid என்ற நிறுவனத்திற்கு 2016-08-18 ஆம் திகதி வியாழக்கிழமை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது.

Back To Business என்ற உதவித் திட்டத்திற்கான முழுமையான உதவிகளையும் Interbuild Aid UK, SLMCC Harrow & SLMCEL East Ham, என்ற லண்டனிலுள்ள மூன்று அமைப்புகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு அனுப்பிவைத்துள்ளன. மேலும் குறிப்பிட்ட இம் மூன்று நிறுவனங்கள் ஊடாக Back To Work என்ற உதவித் திட்டமும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இப் பணத்திற்குரிய காசோலையை ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஜ.எம். ரிழ்வி, ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், Inter build Aid UK யின் கௌரவ செயலாளர்  நமீஸ் இப்றாஹீம் ஆகியோர் இணைந்து Muslim Aid என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் காதர் பைஸர்கான் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

Flood Relief Project “Back To Business”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top